“திமுக - தேமுதிக கூட்டணியை மக்கள் ஏற்கமாட்டார்கள்”.. ஜி.கே. வாசன்

6526பார்த்தது
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (பிப்.19) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், “திமுக - தேமுதிக கூட்டணியை மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று (பிப்.19) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விஜயகாந்த் இருந்த வரை திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கவில்லை” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி