“திருடப்படும் மக்கள் தீர்ப்பு” - முதலமைச்சர் கண்டனம்

43பார்த்தது
“திருடப்படும் மக்கள் தீர்ப்பு” - முதலமைச்சர் கண்டனம்
தேர்தலில் முறைகேடுகள் என்பதையெல்லாம் தாண்டி, வாக்காளர் பட்டியலிலேயே அப்பட்டமான அட்டூழியத்தை அரங்கேற்றி, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை களவாண்டு, பாஜக இன்று அம்பலப்பட்டு நிற்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவரது அறிக்கையில், மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் முறையை சட்டப்படி செய்ய என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனை குளறுபடிகளையும் செய்ய துணிந்து வருகிறது பாஜக. அதற்கு தேர்தல் ஆணையமும் துணைபோவது மக்களாட்சி மீது கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி