
அந்தரங்க வீடியோ விவகாரம்: நடிகை சுரேகா வாணி சட்ட நடவடிக்கை
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்து, அனுமதியின்றி தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பரப்பி வருவதாக நடிகை சுரேகா வாணி வேதனை தெரிவித்துள்ளார். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். சமீபத்தில் நடிகைகள் சுனைனா, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் போலி ஏஐ வீடியோக்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



























