அரியலூர் மாவட்டத்தில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவர் நகுலன், தனது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக நண்பர்களுடன் நேற்று (டிசம்பர் 25) பிள்ளை ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக நகுலன் நீரில் மூழ்கினார். இதனையறிந்த தீயணைப்பு வீரர்கள், நீரில் மூழ்கி மாயமான நகுலனை சடலமாக மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.