ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சின்னவளையம் மேம்பாலத்தில் நேற்று (ஜனவரி 2) இரவு கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியானார். மீன்சுருட்டி நோக்கி வேகமாக வந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே உடையார்பாளையம் நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தவர் பலியானார். ஒருவர் உயிர்தப்பினார்