
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுமத்தூர் ஊராட்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் இன்று (11.11.2025) புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. சுமார் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் ஆர்வமுடன் கலந்துகொண்டு, தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்த விளக்கங்களைப் பெற்றனர்.






























