பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் துங்கபுரம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி (58) என்பவர் தனக்கு சொந்தமான பெட்டிக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படையினர் மற்றும் அவரது குழுவினர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து மொத்தம் 19 கிலோகிராம் எடையுள்ள 29,700 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும், வயலப்பாடி கிராமத்தில் ராமசாமி (66) என்பவர் தனக்கு சொந்தமான பெட்டிக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் ராமசாமியை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து ஹான்ஸ் 750 பாக்கெட் 15 கிலோகிராம் எடையுள்ள 15,000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை இருவரையும் குன்னம் காவல்நிலைய காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.