பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் நகைக்கடையில் திருட முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில், பாடலூர் கிராமத்தில் உள்ள பாலாஜி நகைக்கடையின் காவலாளியை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு, கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். அலாரம் ஒலித்ததால் உரிமையாளர் கிஸோத் (36) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த கண்ணதாசன் (29), முருகன் (25), முருகன் (35), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (20), ஸ்ரீராமு (20) மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (35) ஆகிய ஆறு பேர் நகைக்கடையில் திருட முயன்றது தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆறு பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர்.