வேப்பூர் அருகே வாலிபர் கால்வாயில் விழுந்து மர்ம மரணம்

579பார்த்தது
குன்னம் அருகே கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பரத் (25) என்பவர், வேப்பூரில் உள்ள தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் இவரது உடல் ஆண்டிக்குரும்பலூர் கிராம எல்லையில் உள்ள 8 அடி ஆழமுள்ள கால்வாயில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அருகே பைக்கும் இருந்துள்ளது. எனவே இது விபத்தா அல்லது கொலையா என அவரது பெற்றோரும் பொதுமக்களும் சந்தேகமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி