பெரம்பலூர்: மனித உரிமைகள் குறித்து வான் சாகச விழிப்புணர்வு நிகழ்ச்சி

50பார்த்தது
பெரம்பலூர்: மனித உரிமைகள் குறித்து வான் சாகச விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக பாரா கிளைடிங் என்னும் வான் சாகச நிகழ்ச்சி மூலம் ஜூன் 7 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப்பரிவு), பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு வான் சாகசத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி