பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன், இன்று வாலிகண்டபுரம், ரஞ்சன்குடி, மங்களமேடு, எறையூர் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எறையூர் நரிக்குறவர் காலனியில் பிரச்சாரம் செய்தபோது, நரிக்குறவர்கள் சார்பில் மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்து, அவர்களுடன் நடனமாடினார். பின்னர், அவர்களது ஆதரவை வேண்டி வாக்கு சேகரித்தார். இந்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.