பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அரசு திட்டங்களை கொள்ளையடித்து குடும்பங்களுக்காக செலவழிப்பதாகவும், 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊழல் செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. திமுக அரசை வீட்டுக்கு அனுப்பி, எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி அமைய பாடுபட வேண்டும் என கோஷமிடப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.