பெரம்பலூர்: பெண் ஊழியரிடம் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி

58பார்த்தது
பெரம்பலூர்: பெண் ஊழியரிடம் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி
பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்த 29 வயது அலுவலக உதவியாளர் திவ்யா, நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீடு திரும்பும்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார். இதில் கீழே விழுந்த திவ்யாவுக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.