திருமண தடைச்சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

1பார்த்தது
திருமண தடைச்சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி இன்று (05. 11. 2025) கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், 298 மாணவ, மாணவிகளுக்கு குழந்தை திருமண தடைச் சட்டம் 2006, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 மற்றும் (Drug Free TN) செயலி பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கையேடுகள் வழங்கப்பட்டன. மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயஸ்ரீ, தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி