பெரம்பலூர்: தீப்பிடித்து எரிந்த ஆம்னி கார்

773பார்த்தது
பெரம்பலூர்: தீப்பிடித்து எரிந்த ஆம்னி கார்
மதுரையிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பெருங்காயம் ஏற்றிய ஆம்னி கார், திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை மதியம் தீப்பற்றி எரிந்தது. ஓட்டுநா் மனோஜ்குமாா் காரை சாலையோரம் நிறுத்தி இறங்கியபோது கார் தீப்பிடித்தது. தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும், கார் மற்றும் பெருங்காயம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி