பெரம்பலூர்: ரூ.15.24 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

76பார்த்தது
பெரம்பலூர்: ரூ.15.24 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
நேற்று (13-03-2025) வியாழக்கிழமை பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் #மேட்டுப்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 15.24 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க சித்தார்த்தன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ஜெகதீஸ்வரன், பெரம்பலூர் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி