பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தில், மாவட்ட ஆட்சியர் மிருணாளின் இன்று ஐந்து ஏக்கர் பரப்பளவில் 50,000 மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மியா பாக்கி காடு வளர்ப்பு திட்டம் மூன்றாவது முறையாக செயல்படுத்தப்படுகிறது. அரசு நிலங்களை ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், பசுமைப் புரட்சியை ஏற்படுத்தவும், மழை பெறும் நோக்கிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், பெரம்பலூரில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவும், நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் 15 லட்சம் பனை விதைகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மத்தியில் மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.