சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, அமைச்சர் பங்கேற்பு

3பார்த்தது
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, அமைச்சர் பங்கேற்பு
குன்னம் எம். எஸ். டி திருமண மண்டபத்தில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குன்னம் மற்றும் வேப்பூர் பகுதிகளைச் சேர்ந்த 150 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இன்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் மிருணாளினி ஆகியோர் கலந்துகொண்டு தாய்மார்களை வாழ்த்தினர்.