பெரம்பலூரில் 1. 40 லட்சம் மீன் குஞ்சுகள் வளா்க்க முடிவு

72பார்த்தது
பெரம்பலூரில் 1. 40 லட்சம் மீன் குஞ்சுகள் வளா்க்க முடிவு
பெரம்பலூர் மாவட்டம், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள மூங்கில்பாடி பெரிய ஏரியில் மீன்வளத் துறை சார்பில் மீன் குஞ்சுகள் வளர்ப்புத் திட்டத்தின்கீழ், இந்திய பெருங்கெண்டை மீன் குஞ்சுகள் வளர்ப்புப் பணியை தொடங்கி வைத்தார். 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியை அதிகரித்திடவும், கிராமப்புற மக்களுக்கு மீன்கள் எளிதில் கிடைத்திடவும் ஊரக வளர்ச்சித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில், மீன்வளத் துறை மூலம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் அறிவிக்கப்பட்டது. 

இத் திட்டத்தின் முதல்கட்டமாக, ஆலத்தூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களுக்குள்பட்ட ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 11 நீர்நிலைகளில், 70 ஹெக்டேர் பரப்பளவில் மீன் குஞ்சுகள் வளர்க்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒரு ஹெக்டேருக்கு 2 ஆயிரம் வீதம் 70 ஹெக்டேரில் 1.40 லட்சம் மீன் குஞ்சுகள் பெறப்பட்டு ஏரிகளில் வளர்க்கப்படும். இத் திட்டத்தின்கீழ், மூங்கில்பாடி பெரிய ஏரியில் 6 ஆயிரம் இந்திய பெருங்கெண்டை விட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி