விடுதலை சிறுத்தைகள் கட்சியை விமர்சித்து
திமுக எம்.பி. ஆ.ராசா சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதற்கு விசிகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்த நிலையில், இதுபோன்று ஆபாசமாக பதிவு செய்தது கண்டனத்திற்குரியது. இது தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் கடுமையாக இருக்கும் என்று விசிகவினர் தெரிவித்தனர்.