குன்னம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் புதுவேட்டக்குடி கிராமத்தில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், கழக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட கழக பொறுப்பாளர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஒன்றிய கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.