பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில்
திமுக மற்றும் விசிக இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றது குறித்து
திமுக எம்.பி. ஆ.ராசா சர்ச்சைக்குரிய வகையில் சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதனைக் கண்டித்து குன்னம் பேருந்து நிலையம் அருகே விசிகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த திமுகவினர் அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து இருதரப்பினரும் கல், கட்டைகளுடன் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.