பெரம்பலூர் மாவட்டம் பென்னக்கோணத்தில், மருத்துவம் படிக்காமல் போலியாக மருத்துவம் பார்த்து வந்த கதிர்வேல் (33) என்பவரை சுகாதாரத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து தலைமையிலான குழுவினர் இன்று அதிரடியாக கைது செய்தனர். KK மெடிக்கல் என்ற பெயரில் மருந்தகம் நடத்தி வந்த கதிர்வேல், தனது வீட்டிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இது குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, கதிர்வேல் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.