பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26-ஐ போற்றும் வகையில் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் முகவுரையை நினைவு கூர்ந்து, நாட்டின் இறையாண்மை, சமநலச்சமுதாயம், சமயச்சார்பின்மை, மக்களாட்சிமுறை ஆகியவற்றை நிலைநிறுத்தவும், குடிமக்களின் சமத்துவம், தனிமனித மாண்பு, ஒருமைப்பாடு, உடன்பிறப்புரிமை ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் அலுவலகங்களிலும் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.