வேப்பந்தட்டை வட்டம், கள்ளப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், 618 காளைகள் மற்றும் 290 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி போட்டியைத் தொடங்கி வைத்தார். போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், காளைகள் முட்டியதில் 61 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.