பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட கரம்பியம் கிராமத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட நீர்த்தேக்க அணை தற்போது மோசமான நிலையில் உள்ளது. சுவர்கள் உடைந்தும், ஆங்காங்கே சேதமடைந்தும் காணப்படும் இந்த அணையை, வருகின்ற பருவமழை காலத்திற்குள் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அணை விரைவில் சீரமைக்கப்படாவிட்டால், பருவமழையின் போது பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.