நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

0பார்த்தது
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தினர், களப்பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைத்தல், ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்தல், புல உதவியாளர்களை நிரந்தரமாக்குதல், உயர் அலுவலர்களின் அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கைகளைக் கைவிடுதல், புதிய நகராட்சிகளுக்கு நகர சார ஆய்வாளர் பணியிடங்களை வழங்குதல் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் அடையாள காத்திருப்புப் போராட்டமும் நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் உமாசந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Job Suitcase

Jobs near you