பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிக் குரும்பலூர் அருகே சாலை ஓரம் உள்ள தரைப்பாலத்தின் கால்வாயில் ஆண் சடலம் கிடந்தது. போலீசார் வந்து விசாரித்தபோது, கீழப்புலியூரைச் சேர்ந்த பரத் (23) என்பதும், அவர் தனது டூவீலரில் வரும்போது தவறி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது. இது விபத்தா அல்லது கொலையா என்பது குறித்து போலீசார் பல கோணங்களில் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.