பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டம் குன்னம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி தனிப்படை காவல்துறையினர் அனுமதியின்றி கவுள்பாளையம் கிராமத்தில் டிப்பர் லாரியில் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு குன்னம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த கவுள்பாளையத்தை சேர்ந்த அர்ஜுன்(25) என்பவரை பிடித்து குன்னம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அர்ஜுனை கைது செய்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிடமிருந்து ரூபாய் 16000 மதிப்புள்ள 7.5 யூனிட் மணல் மற்றும் TN45 BR 7362- என்ற பதிவெண்கொண்ட லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த குன்னம் காவல்நிலைய காவல்துறையினர் குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தங்களது பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் திருட்டு, கள்ளச்சாராயம், கஞ்சா, போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.