பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், திருவளக்குறிச்சி ஊராட்சியில் நகரும் நியாய விலை கடையினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு குடிமைப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வின்போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.