பெரம்பலூர்: பாலதண்டாயுதபாணி கோவில் நுழைவாயிலில் லாரி மோதி விபத்து

953பார்த்தது
பெரம்பலூர்: பாலதண்டாயுதபாணி கோவில் நுழைவாயிலில் லாரி மோதி விபத்து
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற பாலதண்டாயுதபாணி கோவிலின் நுழைவாயிலில். திருச்சியில் இருந்து கர்நாடகாவுக்கு பருத்திக்கொட்டை மூட்டைகளுடன் சென்ற லாரி, எதிர்பாராதவிதமாக கோவில் நுழைவாயில் தூணில் மோதியதில், கான்கிரீட் நுழைவாயில் உடைந்து லாரி மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ் காயமின்றி உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு விரைந்த பாடலூர் காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்து, மின் இணைப்பை துண்டித்து, கிரேன் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி போக்குவரத்தை மீண்டும் தொடங்கினர்.

தொடர்புடைய செய்தி