பெரம்பலூர்: ரவுடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

690பார்த்தது
பெரம்பலூர்: ரவுடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது
மதுரை ரவுடி வெள்ளக்காளி சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, 15 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றது. இது தொடர்பாக அழகுராஜா தலைமையிலான 9 பேர் கைது செய்யப்பட்டனர். அழகுராஜா, போலீஸாரை வெட்டித் தப்ப முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான குருசாமி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி