பெரம்பலூர்: வாட்ஸ் அப் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.. கலெக்டர் அறிவிப்பு

0பார்த்தது
பெரம்பலூர்: வாட்ஸ் அப் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.. கலெக்டர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என புதிய கலெக்டர் சரண்யா அறிவுறுத்தியுள்ளார். நிலத்தடி நீர் பற்றாக்குறை ஒரு முக்கிய சவால் என்றும், அதனை வேரோடு களைய திட்டமிட்டு செயல்படப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகள், முதியோர், பெண்கள், இளைஞர்களுக்கான சத்துணவு, ஊட்டச்சத்து, ஆரோக்கியம், வேலைவாய்ப்பு, மனநலம், கல்வி, அரசுத் தேர்வு பயிற்சிகள், திறன் மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும். வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி