பெரம்பலூர்: மாற்றுத்திறனாளி சிறுவன் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

1294பார்த்தது
கீழப்புலியூர் அருகே அரசு அதிகாரிகள், காவல்துறையினர் முன்னிலையில் 15க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் வண்டல் மண் கடத்தல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வண்டல் மண் ஏற்றிச் சென்ற டிராக்டரின் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த வாய் பேச முடியாத சிறுவன் நித்திஷ் (16), எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். விபத்து ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநர் தப்பி ஓடினார். இதையடுத்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி