பெரம்பலூர் மாவட்டத்தில், அய்யலூர், வெண்பாவூர், பெரியவெண்மணி, சிறுகன்பூர் ஆகிய கிராமங்களில் 8.11.2025 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு உணவுப் பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து பயனடையுமாறு கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.