பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

0பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதிற்குட்பட்ட, அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 30.11.2025-க்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி