பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

67பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி, வேப்பூர் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கொளக்காநத்தம் அரசு கலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் 2025-26 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். 

விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 07.05.2025 முதல் 27.05.2025 வரை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரி கல்வி இயக்கத்தில் செயல்படும் உதவி மையத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை 044-24343106 / 24342911 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி