பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பாடாலூர் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்ற உமேஷ் (36) என்பவர் கைது செய்யப்பட்டார். அரசு டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கி வந்து சட்டவிரோதமாக விற்றது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து 40 மதுபுட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். உமேஷ் ஆலத்தூர் ஒன்றிய செயற்குழு உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது. தப்பி ஓடிய அவரது கூட்டாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.