பெரம்பலூர் மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் கூடிய மழையால் வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பேரூராட்சியில் அரசு நெல் கொள்முதல் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. உரிய காலத்தில் கொள்முதல் செய்யாததால் இந்த நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட நெல் மணிகளை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அதிக ஈரப்பதத்தால் முளைப்புத்திறன் ஏற்பட வாய்ப்புள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.