பெரம்பலூர்: வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு ‘சீல்'

0பார்த்தது
பெரம்பலூர்: வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு ‘சீல்'
பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள் எண்ணும் பணி நிறைவடைந்த நிலையில்,  துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டுவரப்பட்டு, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான  மிருணாளினி முன்னிலையில் பாதுகாப்பாக பூட்டி சீலிடப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் கண்ணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனிதா, சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி