சாலை அமைத்து தர வேண்டி கலெக்டரிடம் மனு

2பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், கை களத்தூர் முதல் அய்யனார் செல்லும் சாலையில் 2 கி.மீ. தூரம் மட்டுமே சாலை அமைக்கப்பட்டு, மீதமுள்ள சாலை வனத்துறைக்கு சொந்தமான இடம் எனக் கூறி நிறுத்தப்பட்டுள்ளது. 1800 ஆண்டுகளிலிருந்தே சாலை இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள கிராம மக்கள், சாலை அமைக்கப்படாவிட்டால் தேர்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.