பெரம்பலூர்: பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர் ஏற்படுத்திய போலீசார்

82பார்த்தது
பெரம்பலூர்: பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர் ஏற்படுத்திய போலீசார்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி 18.03.2025-ம் தேதி பள்ளியின் உதவி தலைமையாசிரியர் தமிழரசி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மருத்துவர் டாக்டர். வனிதா, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் தென்றல் மற்றும் One Stop Center மேகலா ஆகியோர்கள் இணைந்து பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்துவம், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.