பெரம்பலூர் மின் கோட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (நவம்பர் 6) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பணிகள் முடியும் வரை ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நமையூர், எறையூர், வி. களத்தூர், திருவாலந்துறை, பிம்பலூர், தைகால், அத்தியூர், லப்பைக்குடிகாடு, பென்னகோணம், திருமாந்துறை, குன்னம், வேப்பூர், நன்னை, வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற் பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.