மக்கள் குறைதற்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 333 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சமூக பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ. 41 லட்சத்து 4 ஆயிரத்து 750 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகள் தங்கப்பதக்கங்களையும் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.