பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் மதுக் குற்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 40 மோட்டார் சைக்கிள்களும், 1 நான்கு சக்கர வாகனமும் டிச. 30-ஆம் தேதி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காலை 10 மணிக்கு அரசு நிா்ணயித்த விலையில் பொது ஏலம் விடப்படுகிறது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் டிச. 28-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் முன் அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம். பதிவு செய்த நபர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பொது ஏலத்தில் காவல்துறையைச் சோ்ந்தவர்கள் பங்கேற்க அனுமதியில்லை. ஏலத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வரவேண்டும். இந்த பொது ஏலத்தில் அனைத்து மாவட்டத்தைச் சோ்ந்தவா்களும் கலந்துகொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு, 94981-59272, 94981-62279, 79041-36038 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.