பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, வங்கி கடன் மானியம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் 13,772 பயனாளிகளுக்கு ரூ.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.