தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 15ஆம் தேதி பெரம்பலூரில் நடைபெற்றது. ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கான தாள் ஒன்று நடைபெற்ற இத்தேர்வுக்கு 1238 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1057 பேர் பங்கேற்றனர். 181 பேர் தேர்வு எழுத வரவில்லை. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தோமினிக் மேல்நிலைப்பள்ளி, தந்தைரோவர் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தேர்வுப் பணிகள் நடைபெற்றன.