தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான 2-ம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் பதவிகளுக்கான பொதுத் தேர்வு வருகிற நவம்பர் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. இத்தேர்வினை 1592 தேர்வாளர்கள் எழுத உள்ளனர் என பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.