பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி தலைமையில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 356 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். அரசு துறை அலுவலர்கள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.