பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எழுமூர் கிராமத்தில் நிலப்பிரச்சனை காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில், அரசன் என்பவரை லதா, ராஜேந்திரன், அறிவழகன், கார்த்திக் ஆகியோர் கட்டையால் தாக்கியதில் அரசன் உயிரிழந்தார். இது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இன்று நீதிமன்றம் 4 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து, ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 1000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. குற்றவாளிகள் நால்வரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.